ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுரங்கப்பாதைக்குள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஸ்லாவியன்ஸ்கி மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதை அருகே பேருந்து திடீரென சுரங்கப்பாதையை நோக்கி பாய்ந்ததில், அங்கு சென்று கொண்டிருந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேருந்து சாரதயின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என பொலிசார் கூறியுள்ளனர்.