மெழுகு உருவ நூதனசாலை திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பொலன்னறுவை புராதன தொழில்நுட்ப நூதானசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெழுகு உருவ நூதனசாலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

புதிய யுகத்திற்கு ஏற்றவாறு நூதன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மனித இனத்தின் பண்டைய தொழிநுட்ப முறைகளை தற்போது வாழ்கின்ற மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், இலங்கையின் புராதன தொழிநுட்பதுடன் தொடர்புடைய தொல்லியல் பொறுமதி வாய்ந்த பொருட்களை சேகரித்து எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கிலும் இந்த நூதனசாலை ஜனாதிபதி அவர்களால் கடந்த ஜூலை மாதம் 03 திகதி திறந்துவைக்கப்பட்டது.

நூதனசாலையின் விசேட பிரிவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெழுகு உருவ நூதனசாலையானது, ஜனாதிபதியினால் நேற்று(12) திறந்துவைக்கப்பட்டதுடன், இப்பிரிவில் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் ஆட்சிப் புரிந்த அரச தலைவர்களின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.