மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு புதிய பதவி…

(FASTNEWS|COLOMBO) இராணுவ படை அதிகாரிகளின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கமான்டோ ரெஜிமன்டின் கட்டளை தளபதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதுவரை காலமும் கட்டளை தளபதியாக கடமையாற்றும் கஜபா ரெஜிமன்ட்டுக்கு மேலாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கனேமுல்லை பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொமாண்டே படையணி தலைமையகத்தில் சம்பிரதாய நிகழ்வுடன் பதவி பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.