மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கு ஏப்ரல் வரையில் ஒத்திவைப்பு…

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட பல பேர் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கினை அநுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 05ம் திகதி வரை ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பிரதான சந்தேகநபரான உமர் ஹப்தாப் என்பவரை அன்றைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் அநுராதபுரத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஒக்டோபர் 06ம் திகதி இடம் பெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கின் சாட்சியாளர்களாக 152 பேர் சட்டமா அதிபரால் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.