மேதினத்திற்குச் சென்று திரும்பிய பஸ் மோதியதில் முஸ்லிம் மாணவன் பலி: மாத்தறையில் சம்பவம்

மேதினத்திற்கு சென்று மாத்தறைக்குத் திரும்பிய பஸ்வண்டி ஒன்று பல்கலைக்கழக மாணவன் மீது மோதியதனால் முஸ்லிம் மாணவன் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஏ.சஹ்ரின் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பஸ் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்று கொண்டிருந்த மாணவன் மீது மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.