இலங்கை அணியின் நடுநிலை துடுப்பாட்ட வீரரான தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக மற்றும் திசர பெரேரா ஆகிய மூவரில் ஒருவருக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் இனது ‘போட்டியினை நிறைவுக்கு கொண்டுவருதல்’ செயற்பாட்டினை பொறுப்பேற்க முடியும் என இங்கிலாந்து முன்னிலையில் இலங்கை அணியின் சுற்றுப் பயணம் குறித்து அணியினை தெரிவு செய்வது குறித்து நேற்று(26) மாலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான குழாமில் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் பெயரிடப்படாமை தொடர்பில் ஹத்துருசிங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே, ஏஞ்சலோ மேத்யூஸ் இனது தொடையின் பின்னால் உபாதை நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விக்கெட்களுக்கு இடையே ஓடும் போது சிரமத்திற்கு முகங்கொடுப்பதாகவும், ஹத்துருசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
“விசேடமாக போட்டியில் முதலில் கலத்தடுப்பிற்கு பின்னர் மேத்யூஸ் துடுப்பெடுத்தாடும் போது விக்கெட்களுக்கு இடையே ஓடுவது மிகவும் குறைவான வேகத்திலேயாகும். இதனால் ஓட்ட எண்ணிக்கை குறைவு மட்டுமன்றி இரண்டாவது துடுப்பாட்ட வீரருக்கான வாய்ப்புக் குறைவு.. இதனால் மற்றைய வீரர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்”
“மற்றைய காரணம் அவர் ஓடும் போது (ரன்அவுட்) 64 முறை ஆட்டமிழந்துள்ளார். அதில 49 முறை மற்றைய துடுப்பாட்ட வீரரே ஆட்டமிழந்துள்ளார்… அவற்றினை சரி செய்து அவர் உடற்தகைமை சீராகியதும் மீண்டும் அணிக்கு வருவதற்கு அவருக்கு வாய்ப்பு உள்ளது.. ”