சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று(01) ஆரம்பமாகிறது.
குழு A இற்கான இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை(03) இலங்கை அணி மற்றும் தென் ஆப்ரிக்கா அணி மோதவுள்ளதுடன், குறித்த போட்டியில் இலங்கை அணி தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் விளையாடுவது உறுதியற்ற தன்மையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கால் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே மேத்யூஸ் விளையாடுவது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை அணி தலைவரான ஏஞ்சலோ மேத்யூஸ் விளையாடமாட்டார் என உறுதியானால் இலங்கை அணி தலைவராக உபுல் தரங்க செயற்படுவார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
