மேத்யூஸ் இற்கு மாற்றீடாக பந்து வீச்சாளர் ஒருவரை கோருகிறார் சந்திமால்..

இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் உபாதைக்குள்ளாகியதைத் தொடர்ந்து அணிக்கு வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து அதிக ஆதிக்கம் தேவைப்படுவதாக தினேஷ் சந்திமால் தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில்; மேத்யூஸ் போட்டிகளின் போது குறைந்தது 2விக்கெட்களையாவது கைப்பற்றுவார் என தெரிவித்துள்ளார்.

“எமக்கு திறமையான வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தேவைப்படுகிறது. எமது முதல் துரும்பு மேத்யூஸ் என்பதனை நாம் எல்லோரும் நன்கு அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவர் எமக்கு குறைந்தது 2 விக்கெட்களையாவது கைப்பற்றித்தரும் வீரர் ஆகும்.”

மேலும், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் திலின துசார மிரண்டோ கடந்த காலங்களில் கழக ஆட்டங்களின் போது திறமையினை வெளிக்காட்டிய சிறந்த வீரர் என்றாலும் அவருக்கு தகுதியான களம் இதுவரையிலும் கிடைக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

20 ஓவர் போட்டிகளில் அதி சிறந்த திறமையினை வெளிக்காட்டிய வீரர்கள் வரிசையில் முன்னிலையில் இருப்பதும் திலின என்றால் மிகையாகாது.

குறித்த திறமைகளில் சில..

14218350_10210549703165137_1155400654_n