மேத்யூஸ் இற்கு விசேட பரிசோதனை – குருசிங்க’விடமிருந்து விசேட அறிவித்தல்..

2017 சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் போட்டி நாளை(03) நடைபெறவுள்ளதால், குறித்த போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் பங்குபற்ற வாய்ப்புக்கள் உள்ளதா என இன்று(02) தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை மேத்யூஸ் போட்டியில் பங்கேற்க 70% ஆக உடற் தகைமை தேர்ந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாளைய போட்டிக்கான இன்றைய பயிற்சி நடவடிக்கைகளின் போது, ஏஞ்சலோ மெத்தியூஸின் உடற்தகுதி குறித்த சோதனை நடைபெறவுள்ளது.

இதில் அவர் தகுதி பெறும் பட்சத்தில் நாளைய போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டியின் போது அவர் உடல் உபாதைக்கு அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)