மேத்யூஸ் விலகியதால் அணியில் முன்னேற்றம் இல்லை, தரங்க குறித்து கவலையடைகிறேன்.. – சனா கருத்து..

இலங்கை அணித்தலைமைப் பதவியிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் விலகியதனால் மட்டும் அணியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது என இலங்கை தேர்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் இலங்கை அணியின் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் மேத்யூஸ் இனது பதவி விலகல் குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“..மேத்யூஸ் சிறந்த வீரர், விளையாட்டு மற்றும் அணியின் நுணுக்கங்களை அறிந்தவர். அணியின் வளர்ச்சிக்கு மேத்யூஸ் மாத்திரம் காரணமாக அமைந்து விட முடியாது, அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அதற்காக பங்களிக்க வேண்டும்.

அணியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொண்டு, அணியில் உள்ள அனைத்து வீரர்களும் உழைப்பது மிகவும் அவசியம். இலங்கையின் ஒருநாள் மற்றும் T20 அணிக்கு புதிய அணித்தலைவராக பொறுப்பேற்றுள்ள உபுல் தரங்கவின் நிலையை நினைத்து எனக்கும் கவலை.

எனினும் அவர் அனைத்து சவால்களையும் ஏற்றுக் கொண்டு ஏனைய வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கி, தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றார், இது ஏனைய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த முன்மாதிரி.

தரங்க தனக்கு வழங்கப்பட்ட கடமையை 100% சிறப்பாக செய்துள்ளார்…” என சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

 

(rizmira)