மாலக்க சில்வாவை கைது செய்ய பிடியாணை…

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

களியாட்ட விடுதியொன்றில், வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் மீது மாலக்க சில்வா தாக்குதல் நடத்தியதாக கடந்த 2014ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணையில் சமுகமளிக்கத் தவறியதையடுத்தே அவருக்கு  கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.