மேர்வின் சில்வா UNP இற்கு பச்சைக் கொடி.. பழி தீர்க்க இதுதான் வழி..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த ஜனாதிபதியும் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்களாகவே இருப்பர் எனவும், தாமும் இந்தத் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவே பிரசாரம் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.