மேற்கிந்திய அணித்தலைவர் சமி விலகுவதாக சிவப்பு சமிஞ்சை

இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பங்குபற்றியது, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐசிசி உடனான முரண்பாட்டுடனேயாகும் என விளையாட்டு ஊடகங்கள் கடந்த தினங்களில் கோடிட்டு விமர்சித்திருந்தன..

அது எவ்வாறாயினும்; அனைத்து தடங்களையும் எதிர்த்து சமியின் தலைமையில் பங்குபற்றி இரண்டாவது தடவையாகவும் உலக்கோப்பையினை தன்வசப்படுத்திக்கொள்ள மேற்கிந்திய அணிகளுக்கு வாய்ப்புக்கிட்டியது.

டேரன் சமி தலைமையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இருபது20 உலககிண்ணம் இரண்டையும் வெல்ல வாய்ப்புக்கிட்டியுள்ளது என்றே கூறலாம்.

எவ்வாறாயினும், தான் இதன்பிற்பாடு போட்டியில் பங்கு கொள்ளப்போவதில்லை என போட்டி இடையில் சமி கூறியிருந்தார்.

“நாம் இன்னும் முயற்சிக்கின்றோம், நாம் இந்த போட்டியில் ஆடும்போது மக்கள் பெரும் வியப்பில் இருந்தனர். எமக்கு கிரிக்கெட் கவுன்சிலுடன் முரண்பாடுகள் இருந்தன.மாக் நிகலோஸ் நமக்கு கூறும் போது மூளையில்லாத வீரர்கள் எனக் கூறியிருந்தார். எனினும், நாம் சளைக்கவில்லை நாம் ஒன்றாகவே களத்தில் இறங்கினோம், இது கரீபியன் ரசிகர்களுக்காக, நான் மீண்டும் கிரிக்கெட் ஆடுவேன் என்பது குறித்து சந்தேகமே” என சமி மேலும் தெரிவித்துள்ளார்.