மேற்கிந்திய அணியானது உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றது…

2019ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மேற்கிந்திய அணிகளுக்கு நேற்று(21) வாய்ப்புக் கிட்டியுள்ளது.

2019ம் ஆண்டின் உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றில், ‘சூப்பர்–6’ போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று(21) நடந்த முக்கிய போட்டியில் மேற்கிந்திய அணி மற்றும் ஸ்காட்லாந்து (5) அணிகள் மோதின.
இதில் வெல்லும் அணி, உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணிகள், 48.4 ஓவரில், 198 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

பதிலுக்கு களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க, 35.2 ஓவரில், 125/5 ஓட்டங்களை எடுத்த போது, மழை குறுக்கிட்டது. ‘டக் வொர்த்’ லீவிஸ் விதிப்படி, இந்த நேரத்தில் 130/5 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.

இதனால், மேற்கிந்திய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, 8 புள்ளிகள் பெற்ற இந்த அணி, எதிர்வரும் 25ம் திகதி நடக்கும் தகுதிச்சுற்று இறுதிக்கு முன்னேறியது.

மேலும், 2019ல் இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கும் தகுதி பெற்று, ஸ்காட்லாந்து அணி வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது.