மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் கிரிக்கட் தொடரில், தென்னாப்பிரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றிருந்தது.
இதில் தென்னாப்பிரிக்க அணி 139 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க 50 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 343 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள், 38 ஓவர்களில் 204 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இதேவேளை இன்றையதினம் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் போட்டியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.