மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், புதிய சாதனையை நோக்கி இலங்கை வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
இதுவரை இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவரான பிரையன் லாராவே 5 சதங்களை விளாசி அதிக சதம் அடித்துள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார, 3 சதங்கள் விளாசியுள்ளார்.
இது இவ்வாறிருக்க தலா ஒரு சதங்களை பதிவு செய்துள்ள திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால் ஆகியோர் குமார் சங்கக்காரவின் 3 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்கும் முயற்சியில் உள்ளனர்.
சிறந்த நிலையில் உள்ள அவர்கள், எதிர்வரும் டெஸ்ட் தொடரில் அச்சாதனையை முறியடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஊகிக்கப்படுகின்றது.
இலங்கை அணி, எதிர்வரும் மே மாத இறுதியில் 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
$riz