மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பெய்து வரும் தொடர் மழையினால் கினியா நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளான செனகல், செய்ரோ லியோன், கினியா ஆகிய நாடுகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் செய்ரோ லியோன் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை பலர் காணாமல் போயுள்ளதாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.