மேலும் இரு மாகாண சபைகளில் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தோற்கடிப்பு…

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று(27) தென் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய தென் மாகாண சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 33க்கு 14 என குறித்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இதற்கு எதிராக வாக்களித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சப்ரகமுவ மாகாண சபையில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 20க்கு 13 என இந்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் குறித்த சட்டமூலம் ஊவா, வடமத்திய மாகாண சபைகளில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையும் தோற்கடிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.