மேலும் 109 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 109 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதில் பேலியகொடை மொத்த விற்பனை மீன்சந்தை ஊழியர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 37 பேருக்கும், அவர்களுடன் தொடர்புனை பேணிய 23 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.