மலையகத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக ஒரு சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.