மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் 02 வான் கதவுகள் திறப்பு…

மழையுடன் கூடிய சீரற்ற கால நிலையினால் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் மேல்கொத்மைலை நீர்தேக்கத்தின் 02 வான் கதவுகள் இன்று(21) அதிகாலை முதல் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நோட்டன் விமலசுரேந்திர நீர்தேக்கத்திலும் நீர் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கொசல்கமுவ ஓயா, டிக்கோயா ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதுடன் டெவன் மற்றும் சென்கிளேயர் நீர் வீழ்ச்சியிலும் அதிகளவில் நீர் வழிந்தோடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.