மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கைது (Update)

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகாரவை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகாரவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி இவர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.