மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை அசமந்தம்..

மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டம் கொழும்பு மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று அந்த அதிகார சபை குற்றம் சுமத்தியுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததன் பின்னர் ​மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை, குப்பைகளை அகற்றுவது சம்பந்தமாக கொழும்பு மாநகர சபைக்கு யோசனைகள் பலவற்றை முன்வைத்துள்ள நிலையில் அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் குப்பைகளை கொட்டும் போது பிரச்சினைகள் தோன்றலாம் என்று ​மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நலின் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

 

(rizmira)