மேல் மாகாண சபைக்கான கதிரை கொள்வனவு மேல் மாகாண ஆளுநர் தலையீட்டினால் இடைநிறுத்தம்…

மேல் மாகாண சபைக்கு கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த அதிக விலையுடைய கதிரைகளை இறக்குமதி செய்வதை இரத்து செய்துள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சபைக்கு ஒவ்வொன்றும் 6 40,000 ரூபா பெறுமதியான 125 கதிரைகளை கதிரைகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

640,000 ரூபா பெறுமதியுடைய 144 கதிரைகளை பெல்ஜியமில் இருந்து கொள்வனவு செய்யும் திட்டத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில் குறித்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்டுகின்றது.