மே தினக் கூட்டப் பணிகள் நிமால் சிறிபாலவிடம் ஒப்படைப்பு

மே மாதம் 1ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் பிரச்சார மற்றும் போக்குவரத்துப் பொறுப்புக்கள் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மே தினக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வமான ஏற்பாடுகள்எதுவும் செய்யப்படவில்லை.

கடந்த காலங்களில் சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்காக அரச தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த தடவை அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் இதுவரையில்மேற்கொள்ளப்படவில்லை.

காலி மே தினக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.