மே தினக் கொண்டாட்டம் 07ம் திகதியன்று…

2018ம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள மே தின நிகழ்வுகள் மே மாதம் 07ம் திகதி கொண்டாட இன்று(27) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இம்முறை வெசாக் தின நிகழ்வுகள் ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30ம் திகதிகளில் இடம்பெறுவதினை முன்னிட்டு மகாநாயக தேரர்களில் விசேட கோரிக்கைக்கு அமைய குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, மே முதலாம் திகதி வழமை போன்று வேலை நாளாகவும், குறித்த விடுமுறை தினம் மே 07ம் திகதி கொண்டாடப்படவும் உள்ளது.

 

-Rishma