மே தினத்திற்கு முன்னர் 04 பேரை தூக்கில தீர்மானம்… அனைத்தும் தயார் நிலையில்…

(FASTGOSSIP | COLOMBO) – எதிர்வரும் மே முதலாம் திகதிக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு அதனை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் முதல் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தண்டனை புதுவருடத்திற்கு பின்னர் வரும் இரு வாரங்களில் நிறைவேற்றப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.