மே.தீவுகள் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான ரசல்க்கு போட்டித்தடை விதிக்க அதிக வாய்ப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான அன்ரு ரசல் ஊக்க மருந்து விதி முறைகளை மீறியதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 12 மாதத்தில் 3 முறை ஊக்க மருந்து சோதனைக்காக அழைக்கப்பட்டிருந்த போதிலும் ரசல் அதனை புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

3 முறை ஊக்க மருந்து சோதனையில் பங்குகொள்ளாமையானது, வீரர்கள் ஊக்க மருந்து உபயோகித்தவர்களாக கருதப்படுவர்.

அதன்படி, ரசல் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக உலக ஊக்க மருந்து தடுப்பு மையம், ரஸ்சலிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஜமைக்காவில் நடைபெறவுள்ளது.

இந்த விசாரணைகளில் அவர் குற்றவாளியாக காணப்பட்டால் 2 வருடங்கள் சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது