மே – 03 உலக ஊடக சுதந்திர தினம்

உலக ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
ஊடக சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும், பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு நினைவூட்டும் நோக்கிலும் ஐக்கிய நாடுகள் சபையினால் குறித்த  இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.
1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 3 ஆம் நாளன்று ஊடக சுதந்திர நாள் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
இன்றைய நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோவினால், ‘யுனெஸ்கோ ஃகிலெர்மோ கானோ’ ஊடக சுதந்திர விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதானது,  1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17ம் திகதி படுகொலை செய்யப்பட்ட கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசாவின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது.
அவர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.