மைதானத்தில் இரத்தம் சொட்டிய நிலையில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ தலைகள்.. – ISIS மீளவும் எச்சரிக்கை…

எதிர்வரும் ஜூன் 14ம் திகதி முதல் ஜூலை 15ந் திகதி வரையில் இடம்பெறவுள்ள ரஷ்யாவில் நடக்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு புதிய படத்தை வெளியிட்டுள்ளனர்.

32 அணிகள் பங்கேற்கும் குறித்த இப்போட்டி தொடருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல்கள் விடுத்திருந்த, நிலையில் தற்போது புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஒரு போஸ்டரில், புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் தலைகளை இருவர் அறுப்பது போன்று காட்டப்பட்டுள்ளது, அதில் மைதானம் உங்களது ரத்தத்தால் நிரப்பப்பட்டிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு போஸ்டரில், எங்களுக்கே வெற்றி என்பது போன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இதேபோன்று மெஸ்ஸியின் கண்களில் இருந்து இரத்தம் வருவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர்.

சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்படுவதாலேயே மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன