(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசினை வழி நடத்துவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளோ அனுதாபங்களோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எச்சந்தர்ப்பத்திலும் தேவைப்படாது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.
சிறிசேனவுக்கு எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தவிசாளர் சிறிசேன, மரண நன்கொடை சங்கத்தின் தவிசாளர் பதவிக்கும் பொருந்தாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.