மைத்திரிபால சிறிசேன கையூட்டல் பெற்றுக்கொண்டாரா? தி ஏஜ்!!..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த காலத்தில் கையூட்டல் விடயம் ஒன்றுடன் தொடர்புப்பட்டிருந்தாரா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகமான தி ஏஜ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையூட்டல் பெற்றுக் கொள்ள முயற்சித்தார் என தெரிவித்து அவுஸ்திரேலியாவின் பெயார்பெக்ஸ் ஊடக குழுமத்தின் தி ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Screenshot_10

 

2011ஆம் ஆண்டில் இலங்கையில் வடிகாலமைப்பு திட்டமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஐகோனிக் ஸ்னோவி மவுன்டைன் என்ஜினியரிங் கம்பனி என்ற நிறுவனம் கையூட்டல் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2.3 மில்லியன் டொலர் பெறுமதியான வடிகாலமைப்பு திட்டமொன்றை மேற்கொள்ள கையூட்டல் வழங்கப்பட்டதாக தி ஏஜ் குறிப்பிட்டுள்ளது.

குறித்த காலப் பகுதியில் அமைச்சரவை அமைச்சராக கடயைமாற்றிய மைத்திரிபால சிறிசேனவும் அவரது இணைப்புச் செயலாளர் ஒருவரும் கையூட்டல் கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன அரசியல் நன்கொடை வழங்குமாறு கோரியதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் நிறுவனத்திடம் கையூட்டல் கோரியமை பற்றிய மின்னஞ்சல்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் அரசியல் நன்கொடை கோரப்பட்டதனை நிறுவனம் உறுதி செய்துள்ளது எனவும், தி ஏஜ் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் கையூட்டல் வழங்கவில்லை எனவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் அவுஸ்திரேலிய மத்திய பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பில் இருந்து செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும்…