குண்டு துளைக்காத கார் ஒன்றை தனக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்து, முன்னாள் ஜனாதிபதி இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டு வருவதால், தனக்கு குண்டு துளைக்காத கார் ஒன்று இருக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச கூறியதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை விட அதிகளவான பாதுகாப்பும் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பயன்படுத்தி வந்த குண்டு துளைக்காத வாகனத்தை அவர் தன்னுடன் எடுத்துச் சென்று விட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.