மைத்திரியின் சுடலை ஞானம் பற்றி மஹிந்த

ஜனாதிபதி சிறிசேனவுக்கு காலம் தாழ்த்தி இப்போதாவது  உண்மை விளங்கியமை, ஒரு விசேட அம்சமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்  குற்றப் புலனாய்வு பிரிவு, நிதி மோசடி விசாரணை பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பன அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதாக இருந்தால், அவை தொடர்பில் தான் தீர்மானம் எடுக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தையிட்டு, தான் ஆச்சரியப்படுவதாக கூறினார்.