மைத்திரியின் பேச்சால் இலங்கை அரசிலில் குழப்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனியான அரசியல் பலத்தையோ, அமைப்பையோ உருவாக்கும் நோக்கில், திட்டமிட்ட வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளார என்பது குறித்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தனித்தனியாக கலந்துரையாடியுள்ளதாக பேசப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 வது ஆண்டு நிறைவு மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தெரிவித்த கருத்துக்களால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.

அந்த உரையில் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பந்தமாக அர்ஜூன் மகேந்திரனுக்கு மேல் இருக்கும் பெரிய துரைமாரை கைது செய்ய நடவடிக்கைகளை தயார்ப்படுத்தியுள்ளதாக கூறியமை அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருப்பவர்களை சிரமத்திற்குள் தள்ளும் நடவடிக்கையாக இருக்கலாம் என ஆளும் கட்சிக்குள் பேசப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த ஜனாதிபதி அதிகாரங்கள் இல்லை எனக் கூறியமை, பலமாக பிரதமர் உட்பட அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தமை மட்டுமல்லாது கட்சிக்கும் தனக்கும் 68 வயது என்பதால், தானும் அனுபவமிக்க நபர் என குறிப்பிட்டமை போன்ற விடயங்கள் எதிர்காலத்தில் அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டு அரசாங்கம் ஒன்றை அமைத்து பிரதமர் பதவியை கைப்பற்றும் திட்டம் மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கின்றதா என்பது பற்றியும் பொதுஜன பெரமுன உட்பட எதிர்க்கட்சியின் பிரதானிகள் விவாதித்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி இதுவரையில் தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வில்லை என்பதுடன் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி அறிவிக்காவிட்டால் சஜித்தின் தீர்மானம் எதுவாக இருக்கும் என்பது தொடர்பாக பேசப்பட்டுவருகின்றது.

அண்மைகாலமாக முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால இடையில் நல்ல உறவு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.