இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியுமின்றி நம்மால் யுத்தத்தினை வென்றிருக்க முடியாது என முன்னாள் பொருளாதார அமைச்சு பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் தோல்விக்கு பிரதான காரணம் நாம் இந்தியாவினைப் பொருட்படுத்தாது பகைத்துக் கொண்டதே பெரும் தவறு என தற்போது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ முன்னாள் அமைச்சரொருவரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலவச அடிப்படையில் உதவிய வழங்கியதாகவும், சீனா பணத்தை பெற்றுக் கொண்டே உதவியதாகவும் தோல்விக்கு நாமே காரணம் என்றும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஐ.தே.கட்சி தேர்தலில் வெற்றியீட்டினால் இவர்களின் அனைத்து விளையாட்டுக்களையும் நிறுத்திக் கொள்வது அவர்களுக்கு நல்லது. மைத்திரியுடன் போடும் விளையாட்டுக்களை ரணிலுடன் போட முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கூறுகையில், தன்னையும் தன் மனைவியையும் பழிவாங்குவதாகவும், தேர்தலில் தனித்து போட்டியிடுவதே சிறந்தது எனவும் கூறியுள்ளார்.