மைத்திரி உடன் இணையும் மஹிந்த.. – நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல்..

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட சந்திப்பு ஒன்று எதிர்வரும் 03ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற உள்ளது.

இதன்போது அடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விஷேட தீர்மானங்கள் பல எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் விஷேட சந்திப்பு ஒன்று இம்மாதம் 29ம் திகதி இடம்பெற உள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குறித்த விஷேட சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதா என்பது தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்பட உள்ளதாக மேலும் கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

(rizmira)