(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இரவு நடைபெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர எம்.பி.க்கு விடுத்த அழைப்பின் பெயரில் சந்திப்பொன்றை நடைபெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி பலமான கூட்டணியாக தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிலைப்பாட்டில் உள்ள முரண்பாடுகள் மற்றும் நிராகரிப்புகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சில மாற்று நகர் வுகளை கையாள முயற்சிக்கின்றது.
எவ்வாறு இருப்பினும் குறித்த சந்திப்பு அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் அறிய முடிகின்றது.