ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவனர் எஸ்.டப்ளியு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவின் 120வது பிறந்த தினத்திற்காக கொழும்பு காலி முகத்திட, பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு மலர் மாலை இடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
எனினும், குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே எவ்வித பேச்சுக்களும் இடம்பெறவில்லை என்பதோடு, நிகழ்வின் பிற்பாடு ஜனாதிபதி சென்றதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் குமாரதுங்க இடையே நெடு நேர கலந்துரையாடல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.