மைத்திரி தலைமையில் சீன நாட்டவர்களுக்கு திருமணம்…

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சீன நாட்டவர்கள் சுமார் 150 பேருக்கு கொழும்பில் திருமணம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திருமணங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதோடு,

இதற்கான ஏற்பாடுகளை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் மேற்கொண்டு வருவதுடன், திருமணம் முடிந்த பின்னர், அன்றிரவு பத்தரமுல்ல – வோட்டர் எட்ஜ் விடுதியில் இராப்போசன விருந்தும் இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து அடுத்த நாள், திருமணம் முடிந்த ஜோடிகள் மூன்று குழுக்களாக, யால, சிகிரியா, கண்டி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகிறது.

 

E – (rizmira)