மைத்திரி புத்தாண்டினை முன்னிட்டு குடும்பத்துடன் வெளிநாடு பயணம்…

(FASTGOSSIP | COLOMBO) – சிங்கள- தமிழ் புத்தாண்டு விடுமுறையை தமது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு ஒன்றுக்குப் தனிப்பட்ட பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாத்திரைப் பயணமாகவும் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த பயணம் குறித்து தகவல் வெளியிட்ட அந்த வட்டாரங்கள், எந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்ற தகவலை வெளியிட மறுத்துள்ளன.

ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறைக் காலத்திலும் ஜனாதிபதி தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.