மைத்திரி – மஹிந்த அரசுக்கு எதிராக ஒன்று சேரும் முன்னணிக்கு புதிய பெயர் மற்றும் இலட்சினை..?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆகியவற்றுக்கு  எதிராக மற்றைய அரசியல் கட்சிகளும் ஒன்றினையும் விதத்தில் புதிய முன்னணி ஒன்றுக்கு புதிய பெயர் மற்றும் இலட்சினைகள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரி – மஹிந்த அரசின் உதயத்துடன் எதிர்வரும் மாகாண சபை, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றினை கருத்திற் கொண்டு பரந்த முன்னணி ஊடாக புதிய பெயருடைய கட்சியில் களமிறங்க ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களிடையே எட்டிய இணக்கத்திற்கு இணங்க குறித்த புதிய முன்னணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புதிய முன்னணியில் எந்தவொரு கட்சிக்கும் இணையலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.