மைத்ரி அணிக்கு தாவவுள்ளார் பந்துல – சந்திரிக்கா வாழ்த்து

முன்னாள் அமைச்சரும், கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான பந்துல குணவர்த்தன மைத்திரி தரப்புக்குத் தாவும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான பந்துல குணவர்த்தன மஹிந்த தரப்பை விட்டு மைத்திரி தரப்புக்கு தாவப் போகும் செய்தி குறித்து கடந்த பல மாதங்களாக வதந்திகள் நிலவி வந்திருந்தது.

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினருமான மனூஷ நாணயக்கார ஆளுங்கட்சிக்குத் தாவியபோது அவருடன் இணைந்து பந்துலவும் அணிமாறத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

எனினும் குறித்த செய்திகள் எதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாதிருந்ததுடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பந்துலவின் அணிமாறும் நடவடிக்கையும் நடைபெறவில்லை.

இந்நிலையில் தற்போது பந்துல குணவர்த்தன மைத்திரி தரப்புக்கு அணிமாறும் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பது புத்திசாலித்தனமானது என்றும், புத்திஜீவியான அவரது வருகை மைத்திரி அணிக்கு நன்மை பயக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பேஸ்புக் ஊடாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் மிக விரைவில் கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து பந்துல குணவர்த்தனவும் மைத்திரி தரப்புக்குத் தாவக் கூடிய வாய்ப்பிருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

bandula