கடந்த ஏப்ரல் 25ம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு இராணுவ கொப்ரால் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உதவி பொலிஸ் அதிகாரி, மற்றும் பொலிஸ் சார்ஜன் ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் இன்று (01) அங்குனுகொலபெலஸ்ஸ நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது பிரதான நீதவான் மயுர சமரதுங்க பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் தலா 2 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகைத் தருமாறும் இவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.