இரண்டு நாள் உத்தியோக விஜயம் ஒன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா விஜயமாகியுள்ளார்.
குறித்த இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய ஜனாதிபதி ப்ரனாப் முகர்ஜியை ராஸ்டபவனில் சந்திக்க உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் இந்தியாவில் இடம்பெறவுள்ள, உலக புகைபொருள் கட்டுப்பாடு தொடர்பான சம்மேளனத்தின் ஏழாவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
புதுடில்லியின் நோயிடா பிரதேசத்தில் இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளதோடு, உலக சுகாதார அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இதில் இலங்கை உள்ளிட்ட 180 நாடுகளில் பிரநிதிதிகள் பங்குகொள்கின்றனர்.
இந்த கூட்டத்தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.