மொடலிங் பணியில் தோல்வியுற்ற பின்னர் ருமேனிய பொலிஸ் உத்தியோகத்தரான யுவதி

ருமேனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் மொடல் அழகியாக தொழில் புரிந்து அதில் வெற்றி பெற முடியாத நிலையில் ருமேனிய பொலிஸ் உத்தியோகத்தராக இணைந்துள்ளார். தற்போது அவரை உலகின் மிகக் கவர்ச்சியான பொலிஸ் உத்தியோகத்தர் என பலர் வர்ணிக்கின்றனர். கார்மேன் ஜூன்கென் எனும் இந்த யுவதி 27 வயதானவர்.

மொடல் அழகியாகத் திகழ வேண்டும் என்பதே அவரின் இளமைக்கால ஆசையாக இருந்தது. தனது விருப்பப்படி அவர் மொடலாக வாழ்க்கையைத் தொடங்கினார். கார்மேன் ஜூன்கெனின் கவர்ச்சி போஸ்கள் பல சஞ்சிகைகளில் வெளியாகின. ஆனால், கார்மேன் ஜூன்கென் எதிர்பார்த்த அளவுக்கு அவரால் மொடலிங் துறையில் முன்னேற முடியவில்லை.

இதனால் வேறு துறையில் பணியாற்றுவதற்கு அவர்  தீர்மானித்தார். இந் நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் ருமேனிய பொலிஸ் திணைகளத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக அவர் இணைந்தார். ருமேனிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்தபின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையே இவர் திருமணம் செய்தார்.

உலகின் மிகக் கவர்ச்சியான பொலிஸ் உத்தியோகத்தர் என கார்மேன் ஜூன்கெனை பலர் வர்ணிக்கின்றனர். அதேவேளை, கவர்ச்சி மொடலாக பணியாற்றிய ஒருவரை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொண்டமை குறித்தும் சிலர் விமர்சித்துள்ளனர். ருமேனிய பொலிஸ் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், கார்மேன் ஜூன்கென், பொலிஸ் திணைக்களத்தில் இணைவதற்கு முன்னரே அவர் மொடலாக போஸ் கொடுத்ததால் இதை ஒரு பிரச்சினையாக தான் கருதவில்லை எனக் கூறியுள்ளார்.