நேற்று மாலை மொனராகலை – ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் வீசிய பலத்த காற்றினால் 15 வீடுகளுக்கு சேதம் ஏட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அங்கு மழையும் பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததால் ஒக்கம்பிட்டிய மருத்துவனையின் சில கட்டிடங்களுக்கும், பாதுகாப்பு சுவருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.