மொரகஹகந்த திட்டத்தினால் இழப்பீடு கிடைக்காத மக்கள் பாதையில் குடியேற்றம்…

மொரகஹகந்த நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தினால் காணிகளை இழந்த குடும்பங்கள் நாவுல, எலகமுவ பிரதேசத்தின் வீதிகளில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசமானது நீரினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு தருவதாக கூறப்பட்ட இழப்பீட்டுத் தொகையினை மகாவலி அதிகாரசபை இதுவரை பெற்றுத்தரவில்லை என்றும் தமக்கு இருக்க இடமில்லை எனவும் அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பார்வையிட நாவுல பிரதேச செயலாளர் நிஷாந்த கருணாரத்ன அவர்களும் களத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)