மொறகஹகந்த பல்நோக்கு திட்டத்தின் கீழ் நீர்த்தேக்கத்தில் சம்பிரதாயபூர்வமாக நீர் நிரப்பும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று(11) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த இந்த திட்டத்திற்காக 1150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 94,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.