மொரகஹகந்த நீர்தேக்கத்தின் நீரை வட மாகாணத்திற்கும் பெற்று கொடுக்கும் போது அந்த திட்டத்தில் சில அதிகாரங்கள் வட மாகாண சபைக்கு கிடைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தினால் வட மாகாண சபைக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து அறிவுறுத்துவதற்காக யாழ்ப்பாண நீர்ப்பாசன கேட்போர் கூடத்தில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜப்பானின் ஜய்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலருடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வட மாகாண சபையின் சில உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர் உட்பட மாகாண சபையின் அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.